கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 50 வயது மதிக்கத்தக்க சுகவனம் என்பவர் கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் தகவல் அறிந்த கரூர் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
கரூர் மாவட்டம், காட்டூர் நல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தோட்டத்தில் கிணறு உள்ளது. வாங்கல் அக்ரஹாரம் பகுதியைச்

சேர்ந்த சுகவனம் 50 வயது பால் கறக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை பால் கறக்க சென்ற போது தவறி கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றிலிருந்து ஏற முடியாமல் கடந்த 2 நாட்களாக கிணற்றிலே பாறையை பிடித்துக் கொண்டு தண்ணீரில் மிதந்துள்ளார்.
இன்று தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது பார்த்தபோது ஒருவர் தண்ணீரில் இருப்பதை பார்த்து உடனடியாக கரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரோப் கயிறு மூலமாக கிணற்றில் இரண்டு நாட்களாக மிதந்து கொண்டிருந்தவரை பத்திரமாக மீட்டு உடனடியாக வாங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
