Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் விழிப்புணர்வு…. உறுதிமொழி கையெழுத்து… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம், இளம் தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் -தேசத்தின் பெருமிதம் என்ற மாபெரும் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை  வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி, தனி வட்டாட்சியர் சோனை கருப்பையா மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!