Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் பரப்புரை- ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட எம்பி கனிமொழி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமியை ஆதரித்து, குலசேகரம்–அரசமூடு ஜங்க்ஷன் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் அரிவாள் சுத்தியல் மற்றும் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டதும், தனது பேச்சை நிறுத்தி, பொதுமக்களிடம் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் வழிவிடத் தொடங்கினர்; ஆம்புலன்ஸ் சென்ற பிறகு, பிரச்சாரத்தை மீண்டும் தொடரந்தார்.

error: Content is protected !!