Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் திருவிழா… 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அதைபோல, வாக்குசாவடியும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு 6 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் பயணம் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, வாக்குப்பதிவுக்கான பொருட்கள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில், ஜெயராணி, செந்தில்,சுதா,பவுல்ராஜ் ஆகியோர் வசிக்கிறார்கள். ஆனால், இந்த வாக்குச்சாவடியில் ஐந்து வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இன்னொருவர் ஆன்லைனில் விண்ணப்பம் அளித்துள்ளார்.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்தவர் யார் என்பது பற்றிய விவரம் இன்னும் தெரிய வரவில்லை. எனவே, இவர்கள் 5 பேருக்காக வாக்குசாவடி கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,650 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கிராமம், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் எல்லைக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!