Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் 9ம் தேதி தேர்தல்.. கன்னியாகுமரி – எல்லை பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

கேரளா மாநிலத்தில் வருகின்ற 09.04.2026 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழக கேரள எல்லையான பத்மனாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதி மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 07.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் 09.04.2026 (கேரள மாநிலம் தேர்தல் நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரையிலும் செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பா.ஜ.க. 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் 92 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 76 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளை களமிறக்கி உள்ளன.

error: Content is protected !!