Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் – பரங்கிமலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இரவு 11:05 மணி முதல் அதிகாலை 3:05 மணி வரை சில மின்சார ரயில் சேவைகள் முழுமையாகவும், பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து ஆதாரமாக மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே முக்கிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாகவே நாளை 5.6.2026 வெள்ளிக்கிழமை இரவு 11:05 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 3:05 மணி வரை, சுமார் 4 மணி நேரத்திற்கு இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நாளை இரவு 11:40 மற்றும் 11:59 மணிக்கு தாம்பரம் நோக்கிப் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

அதே நேரம் இரவு 11:20 மணிக்குக் கூடுவாஞ்சேரியிலிருந்து புறப்படும் ரயில் மற்றும் இரவு 11:00 மணிக்குச் செங்கல்பட்டிலிருந்து புறப்படும் ரயில் ஆகியவை தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது பயணங்களைத் திட்டமிட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!