இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்க சில தனியார் துறைகள் தடுப்பதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார், இந்நிலையில் மஸ்க் குற்றச்சாட்டிற்கு ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் நியாயமான பாகுபாடற்ற விதிமுறைகளே பின்பட்சப்படுகிறது, என்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அலைக்கற்றை கொள்கைகளுக்கு உற்பட்டு அனுமதி கோரக்கூடிய எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், இந்த நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம் விளக்கம் ஓன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கு காரணம் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஒரு குற்றச்சசாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார், இது அவருடைய ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைய சேவையை இந்தியாவில் வழங்குவதற்காக ஈடுபட்டு வருகின்றன, இந்நிலையில் இந்தியாவில் தன்னுடைய ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணையசேவை திட்டத்தை, சில பேரும் முதலாளிகள் தடுத்து வருவதாக அவர் தனது ஏக்ஸ் தலத்தில் பகிரங்க குற்றசாட்டை முன்வைத்திருந்தார்.
அதற்கு அவர் சொல்லக்கூடிய காரணம், இந்திய வாடிக்கையாளர்கள் மீதான தனது மோனோபோலியை தக்கவைத்துக் கொள்ளுவதற்காக அவர்கள் இவ்வாறு செய்வதாகவும், இது இந்திய மக்களுக்கு எதிராக அவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய குற்றம் என்றும், அவர் தெரிவித்திருந்தார், அவர் நேரடியாக யாரையும் குற்றம் சாட்டவில்லை ஆனான் அவர் சொல்லுவதை வைத்து பார்க்கின்ற பொது இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையில் ஜாம்பவான்களாக இருக்கக்கூடிய ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவற்றை குறிவைத்துத்தான் அவர் இது போன்ற குற்றசாட்டை சுமத்துகிறார் என்று புரிந்துகொள்ளப்பட்டது.
இந்த ஒரு சூழ்நிலையில் தான் இந்திய ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம் இந்த ஒரு விளக்கத்தை அளித்துள்ளது, குறிப்பாக ஈரான் போன்ற உரிமம் பெறாத வெளிநாடுகளில் ஸ்டார்லிங்க் முகமைகள் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதாக சில புகார்கள் இருக்கிறது, எனவே இந்தியாவின் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு முகமைகள் ஸ்டார்லிங்க்கு இறுதி பாதுகாப்பு அனுமதிகளை வழங்குவதில் கூடுதல் ஆய்வுகளை செய்துவருவதன் காரணமாக, இந்த அனுமதிகளை இன்னும் வழங்காமல் இருப்பதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர், இந்த ஒரு சூழலில் தான் மத்திய அரசு போன்ற ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
தாங்கள் யாருக்கும் இது போன்ற ஒரு பாகுபாட்டை காட்டுவதில்லை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் முறையான ஆய்வுகளுக்கு பின் அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான அந்த உரிமமானது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உலகளவில் ஸ்டார்லிங்க் உட்பட மூன்று நிறுவனங்களுக்கு இந்த ஜின்பிசிஸ் என்று சொல்லக்கூடிய உரிமங்கள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கூடுதலான பாதுகாப்பு ஆய்வுகள் இதை பயன்படுத்தக்கூடிய பயனர்களுடைய டேட்டா பாதுகாப்பாக இருக்குமா என்பதையெல்லாம் தங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அந்த ஆய்வு முடிந்த பிறகு இறுதி அனுமதி வழங்கபடும், என்றும் ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
