Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொன்மலை பணிமனை நூற்றாண்டு விழா – 100 மரக்கன்றுகள் நடவு!

திருச்சியில் இன்று காலை 11.00 மணியளவில் பொன்மலை ரயில்வே பணிமனையின் 100-ம் ஆண்டு தொடக்கத்தை அடிக்கல் (1926 அக். 28) முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை வலியுறுத்தும் வகையில் 100 மரக்கன்றுகள் நடும் விழா பொன்மலை ரயில்வே அம்பேத்கர் கல்யாண மண்டபம் அருகே நடைபெற்றது.

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் துணை மேலாளர் ஐலால், ஓய்வுபெற்ற பொன்மலை ரயில்வே ஊழியர்கள் துரைராஜ், முருகானந்தம், மைக்கேல், பிட்டர் ரயில்வே தொழிலாளர்கள் டீசல் ஷாப் ஜான் பிரிட்டோ,

காயத்திரி, சங்கிதா, தொழிற்சங்க நிர்வாகி எஸ். ரகுபதி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

புதுக்கோட்டை வனத்துறை சார்பில் புங்கை, இலுப்பை, நாவல், போன்ற நாட்டு மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை நடுவதற்கும் உதவிய வனத்துறை அதிகாரி மணிகண்டன், ஊழியர்கள் செல்வகுமார், ஜெயகுமார் ஆகியோருக்கு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு

சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் நூல்கள் வழங்கப்பட்டன.

விழாவில், “நூற்றாண்டு பயணத்தின் நினைவாக – நூறு மரங்கள்; நாளைய தலைமுறைக்காக பசுமையான பொன்மலை” என்ற பசுமைச் செய்தி வலியுறுத்தப்பட்டது.

பொன்மலை ரயில்வே பணிமனையின் நூற்றாண்டு வரலாற்றை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த மரக்கன்று நடும் நிகழ்வு, வருங்கால தலைமுறைக்கும் பயனளிக்கும் வகையில் பசுமையை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது.

error: Content is protected !!