Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறார்கள். சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு 150 கோடி மதிப்பிலான 30 கிலோ போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த யேசுதாஸ் உட்பட்ட 3 நபர்களை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல்வேறு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய யேசுதாஸ் மற்றும் சிலர் பெயிலில் வெளியே வந்திருப்பதாக தெரியவருகிறது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்திருப்பதாக கூறி வழக்கு பதிந்து, தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் யேசுதாஸ் மற்றும் அந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களுடைய வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் 3 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வியாசர்பாடி சாஸ்திரி நகரில் இருக்கக்கூடிய யேசுதாஸ் உடைய வீடு மற்றும் கொடுங்கையூரில் உள்ள அவருடைய அஸோஸியேட் வீடு என மொத்தம் 3 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டுவருவதாக அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் யார் யார் இருக்கிறார்கள் என்ற கோணங்களில் அமலாக்கதுறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!