Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக எழுதி பெற்றதாக அளித்த புகாரின் பேரில், வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.ர

மேலும், இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் 2 முறை மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் கரூரில் இரண்டு முறை சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவருடைய ஆதரவாளர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்மையில் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து இன்று காலை எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினரும், ஈரோடு மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான கவின்ராஜ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த சென்ற நிலையில், அவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தினரிடம் விசாரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கரூர் திண்ணப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஈரோடு மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைத் தலைவர் பசுபதி செந்தில் உள்ளிட்ட 3 பேரை நேரில் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!