Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?… எடப்பாடி விளக்கம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். ஒரு சிலர் யார் என்று உங்களுக்கே தெரியும். தேவையில்லாமல் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
ஒற்றைத்தலைமை என்று சொல்ல வேண்டாம்.நான் எப்போதும் சாதாரண தொண்டன் தான். திமுகவைஎதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக தான். இனி பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும். எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் சபாநாயகரிடம் முறையிடுவோம். தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி உள்ளது. கர்நாடகத்தில் எங்கள் அடையாளத்தை காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!