மாநிலங்களவையில் குடியரசுலைவர் உரைக்கு நன்ற் தெரிவிக்கும் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய கமல்ஹாசன், “எனது அன்பு நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. நான் சினிமா என்னும் வழியில் தான் வந்திருக்கிறேன் தமிழ்நாட்டின் பரமக்குடி என்று சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பிழைகளை ஏற்க முடியாது. பிஹாரில் தொடங்கிய எஸ்ஐஆர் என்னும் நோய் நாடு முழுவதும் பரவுவதை அனுமதிக்க முடியாது. அதை தடுப்பதற்காகத்தான் எனது சகோதரி அக்கா மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் முன்பு போராடி இருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் அவர் சட்டப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.
பட்ஜெட் உரை மீது நான் பேசுகிறேன் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து இடைநிற்றலை செய்த ஒருவன் பொருளாதாரம் குறித்து பேசுவதாய் என நீங்கள் ஐயம் கொள்ளலாம். அது அப்படியே கூட இருக்கட்டும். ஆனால் இதில் ஒரு தமிழனாக எனக்கு சில கருத்துக்கள் இருக்கிறது. உங்கள் முன்னால் நிற்கக்கூடிய இந்த கமல்ஹாசன், எம்கே காந்தி, பெரியார் என்னும் பேராசான்களின் பேரனும் அண்ணா என்னும் மாமனிதனின் மகனும் ஆவான். எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 1967-இல் எனது கருத்து உருவாக்கத்தில் வழிகாட்டியாக அவர் அமைந்தார். அவர் வழிகாட்டிய மையம் என்ற கொள்கையை தான் நான் கையில் வைத்திருக்கிறேன். அவர் உரையாற்றிய இதே அவையில் இருந்து நானும் பேசுகிறேன். நான் எனது மனதில் மையம் கொண்ட புயலில் இருந்து வரும் வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறேன். இந்த வார்த்தைகள் உங்களில் சிலருக்கு காயத்தை கொடுக்கலாம்.
நான் பேசும் இந்த உரையை கோபம் இல்லாமல் பேசுவதற்கு காந்தி எனக்கு கற்றுக் கொடுத்தார். புள்ளிவிபரனுடன் பேசுவதற்கு பெரியார் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.அண்ணா இந்த பெரும் அவையை புரிந்து கொள்வதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த மாபெரும் கட்டிடம் இருக்கவும் நாம் இன்றைய சுதந்திரத்தை அனுபவிக்கவும் இவர்கள்தான் போராடினார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்திருக்க மாட்டோம். நான் கடவுளை நோக்கி கை கூப்ப போவதில்லை எனது பகுத்தறிவு மூளை ,கடவுள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்புறப்படுத்திவிட்டது. ஓட்டையும், நாட்டை இந்த கமல்ஹாசன் விற்கமாட்டான்” என்றார்.

