Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக  உள்ளார். வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோதிடமும் பார்த்து வருகிறார்.

அருண்குமார், தரங்கம்பாடி கடற்கரையில் பழமை மிக்க மாசிலாமணி நாதர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இஅதன்படி  நேற்று இரவு கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் அருண்குமார்  கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது. அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் அருண் குமார் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் அருண்குமார் 65 சதவீதம் தீக்காயமடைந்தார். அவரை   தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  வந்து சேர்த்தனர். முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா, தொழில்முறை போட்டியால் நடைபெற்றதா என்பது குறித்து பொறையார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!