பாலியல் குற்றச்சாட்டில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முறையான விசாரணை நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது. AI மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
