வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். அப்புக்கல் சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு தயாரிப்புப் பணியின்போது இந்த திடீர் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 2 பெண்கள் பலி
