கவுகாத்தி, நவம்பர் 11: அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே கொல்கத்தா–சைராங் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (நவம்பர் 11) காலை 6.54 மணியளவில் கவுகாத்தி அருகே உள்ள டிகாரு ரயில் நிலையப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
