Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சொட்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி மகேஸ்வரி 45. இவருக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ளார். சின்னதுரை இறந்த பிறகு திருமணம் ஆன மகேஸ்வரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து சொந்தமான தோட்ட வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மகேஸ்வரிக்கும் அவரது மகள் வினோதினிக்கும் குடும்ப தகராறில் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள சொந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் 1 மணி நேரமாக போராடி அவரது உடலை மீட்டனர். அவரது உடலை கைப்பற்றிய நங்கவரம் போலீசார் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
error: Content is protected !!