நில அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து அதற்கான பணம் செலுத்திய நிலையில் நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு சொந்தமான நிலம் நடுவிக் காடு கிராமத்தில் உள்ளது.இந்த நிலத்தை அளந்து தர கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து நில அளவீடு செய்வதற்காக பணமும் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிலத்தை அளவீடு செய்ய நில அளவையர் காலம் தாழ்த்தி வருவதாகவும் அளவீடு செய்வதற்கு 25,000 செலவாகும் எனவும் இது பழைய பத்திரம் அதனால் இதை வைத்து அளக்க முடியாது என பல்வேறு காரணங்களை சொல்லி காலம் தாழ்த்தி வருவதாக சங்கர் குற்றம் சாட்டுகிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இடத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத வில்லை. எனவே எனது நிலத்தை அளவீடு செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
