Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே விவசாயி தலை துண்டித்து படுகொலை… 3 பேர் சிக்கினர்

திருச்சி அருகே விவசாயி வெட்டிக்கொலை.... பரபரப்பு

திருச்சி அருகே விவசாயி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்
சோமரசம்பேட்டையில் மூன்று பேர் சிக்கி உள்ளனர்.அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி நவ 16-

திருச்சி சோமரசம்பேட்டை அருகே விவசாயி ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி யை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள போதாவூர் மேலதெருவைச் சேர்ந்தவர்பாண்டியன் (வயது 49) விவசாயத் தொழிலாளி இவர் நேற்று தனது தோட்டத்து வேலையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பாண்டியனின் கழுத்து மற்றும் தலைப் பகுதியைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல் துறையினர்
பாண்டியனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே விவசாயி ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு பாண்டியன் இறந்ததற்கான காரணம் என்ன ? கொலையாளிகள் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பாண்டியன் கொலைக்கு முன்விரோதமா ? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை
போலீசார் சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!