சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே பட்டப்பகலில் விவசாயி ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடையமேலூர் அருகே கடைவீதிக்குச் சென்ற விவசாயி மகேஸ்வரன் (40) என்பவரை மர்ம கும்பல் ஒன்று விரட்டிச் சென்று தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகங்கை போலீசார், மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் விவசாயி விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
