திண்டுக்கல்: வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி (90) என்ற மூதாட்டி கார்த்திகையை முன்னிட்டு தீபம் ஏற்றியபோது புடவையில் தீப்பற்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார். இன்று காலை வீட்டு வேலைக்கு வரும் பெண் சென்று பார்த்தபோது கருகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சென்னையில் உள்ள அவரது மகன் அளித்த தகவலை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தீபம் ஏற்றியபோது தீ விபத்து- மூதாட்டி பலி!
