Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல்-டீசல் கேன்களுடன்..விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

கோவை: பெட்ரோல் டீசல் கேன்களுடன் வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய உழவு கருவிகளுக்கு பெட்ரோல் டீசல்களை கேன்களில் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பெரிய பெரிய கேன்களுடனும் உழவு கருவிகளுடனும் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகளுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் முக்கிய எரிபொருளாக உள்ள நிலையில் சில கருவிகளை நேரடியாக பெட்ரோல் பங்க்குகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. எனவே விவசாயிகள் பெரிய பெரிய கேன்களில் எரிபொருளை நிரப்பி வந்து அந்த உழவு கருவிகளில் ஊற்றி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல் பங்க்குகளில் விவசாயிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் கேன்களில் வழங்கி வந்த நிலையில் அண்மையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கருவிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல்களை ஊற்ற முடியாததால் அதனை பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாகவும் எனவே மத்திய மாநில அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி பெட்ரோல் பங்குகளில் விவசாய உற்பத்தி மற்றும் உளவு கருவிகளுக்கு பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கேன்களில் வழங்கிட வலியுறுத்தியும் சிறப்பு அனுமதி இதற்காக கொடுக்க வேண்டும் அல்லது நேரடி விநியாகத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பெட்ரோல் டீசல் கேன்களை சுமந்து கொண்டும் சிறிய ரக உழவு கருவிகளை எடுத்து வந்தும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

உடனடியாக மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயம் செய்வதற்கு பெரும் சிரமம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

error: Content is protected !!