Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கோர விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

திருச்சி மாவட்டம், முசிறியில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் விபத்தா? அல்லது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறி புதுத்தெருவைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவரின் மகன் மகேஸ்வர தயால் (19) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி (B.Sc Computer Science) பயின்று வந்தார். இவருடன் முசிறி சிந்தாமணி தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அருள் முத்துக்குமரன் (20) என்பவரும் பயணித்துள்ளார்.

அருள் முத்துக்குமரன் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் (B.Com) பயின்று வந்தார்.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில், இருவரும் இருசக்கர வாகனத்தில் முசிறி SB மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முசிறி போலீசார், மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார்
அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத ஏதேனும் ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதா?
அல்லது நள்ளிரவு நேரம் என்பதால் நிலைதடுமாறி வாகனம் கீழே விழுந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா?
என்கிற கோணத்தில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் முசிறி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!