சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மீது சிறுவன் ஓட்டிய பைக் மோதியுள்ளது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், ஓட்டுநர் உரிமையின்றி பைக்கை ஓட்ட அனுமதித்ததாக அவரது தந்தை சந்தீப்குமாரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
