பெங்களூரில், வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கேட்டதை எதிர்த்த பேராசிரியரான மகள் துர்காவை, அவரது தந்தை கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட தந்தை நாகேந்திராவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
