Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. மருத்துவமனையை மருத்துவர்களான இரு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையின் நிர்வாகிகளில் ஒருவரான பெண் டாக்டர் அழகாநந்தா மருத்துவமனைக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.சமீப காலமாக சகோதரர்களுக்கு இடையே

மருத்துவமனையை நிர்வகிப்பதில் சொத்துத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்தநிலையில்
பெப்பர் ஸ்பிரே அடிக்கப்பட்டதால் கடும் மூச்சுதிணறல் ஏற்பட்டு நோயாளிகளும், செவிலியர்களும் அலறியடித்து வௌியே ஓடிவந்தனர். தகவல் அறிந்து வந்த மணப்பாறை போலீசாரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் டாக்டர். சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மீது பெண் டாக்டர் அழகாநந்தா பெப்பர் ஸ்பிரே அடித்ததாக தகவல் வௌியாகியுள்ளது. பொது வார்டின் கதவுக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டு உள்ளே சென்ற அழகாநந்தா. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மற்றொரு மருத்துவர் மோகனசுந்தரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!