Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் ….500 பேர் பங்கேற்ற வாள் வீச்சு போட்டி

கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியவை  இணைந்து மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டியை  சரவணம்பட்டியில்   உள்ள  பள்ளி வளாகத்தில்   4 நாட்கள் நடத்தியது.

சென்னை,திருச்சி,மதுரை,
திருவண்ணாமலை, கோவை,ஈரோடு என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஜூனியர் மற்றும் சீனியர் என பிரிவுகளில் ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், போட்டிகள் நடைபெற்றன.

முதல் நாளில் சுமார் நூறு பேர் பங்கேற்ற நிலையில் வாளை ஆவேசமாக வீரர்,
வீராங்கனைகள் சுழற்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்..
இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு  செல்ல உள்ளதாக   போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கருணாமூர்த்தி மற்றும் தியாகு நாகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!