கரீபியன் தீவு நாடான ஹைதியில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கெண்ட்ஸ்கப் நகரில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் 42 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். 2021-ல் அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலைக்குப் பிறகு ஹைதியில் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
