ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை போடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரயில்வே அமைச்சகம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தியுள்ளது. ரயில்கள் மற்றும் நிலையங்களில் தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் குப்பைகளை உரிய இடங்களில் மட்டுமே போட்டு, ரயில்வேயின் தூய்மை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
