பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அரசு அனுமதியுடன் இயங்கிவரும் ஆலையில் வெடிவிபத்தின்போது 30க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று இரவு வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக இருந்தது.
படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பஞ்சவர்ணம் என்பவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு வெடி விபத்தில், உயிரிழந்தோரில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
