உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள பிப்ரி பகுதியில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துயர சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
