கே.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள ’13’ என்ற ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. உண்மை சம்பவங்களுடன் அமானுஷ்யங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பவ்யா த்ரிகா, கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 13 என்ற எண்ணின் மர்ம பின்னணியை பேசும் இத்திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷின் ‘13’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
