மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், ரவி நெலகுதிதி இயக்கும் 41-வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் நாளை (ஜூலை 10) காலை வெளியாகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இத்திரைப்படம், ‘லக்கி பாஸ்கர்’ வெற்றியை தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
