திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்; மக்கள் அதிர்ச்சி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.

அதிலும் குறிப்பாக ரங்கநாதருக்கு பூஜை செய்வதற்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்படுவது வழக்கம். குறிப்பாக ஆடிப்பெருக்கு, மாசி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடி விளக்கேற்றி வழிபாடு நடத்துவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சி காவேரி ஆற்றில் திடீரென இன்று டன் கணக்கில் மீன்கள்

இறந்து கரை ஒதுங்கியது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக கரை ஒதுங்கிய

மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்போது இறந்து கரை ஒதுங்கிய மீன்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் உடனடியாக கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
