Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே மீன்பிடி திருவிழா… இளைஞர்கள் ஆர்வம்

திருச்சியில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள சமுத்திரம் கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில் அதில் அதிக அளவில் மீன்களும் துள்ளி விளையாடின. இந்நிலையில் தற்போது நீரின் அளவு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி இன்று ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைக்க, போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி ஊர்மக்கள் மீன் பிடிக்கத் துவங்கினர். கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் அனைவருக்கும் சிக்கியது. அனைவருக்கும் சுமார் 2 முதல் 10 கிலோ வரையில் பெரிய பெரிய மீன்களாக சிக்கியதால் இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!