தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. சிவ பிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. ஊர்க்காவல் படை டி.ஐ.ஜியாக விஜயலட்சுமியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக சண்முக பிரியா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
