Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 2 இடத்தில் பறக்கும் படை சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்

வரும் ஏப்ரல் 23 ந்தேதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர் அந்த வகையில் திருச்சி ஓலையூர் சுற்று ரோடு பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் வந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக நேற்று இரவு உடையான்பட்டி ஆற்றுப்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் இருந்து ரூபாய் 4 லட்சத்து 78 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
இதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தன.

error: Content is protected !!