Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் -சுற்றுவட்டாரப் பகுதியில் பனிப்பொழிவு-வாகன ஓட்டிகள் அவதி

கரூர் -சுற்றுவட்டாரப் பகுதியில் பனிப்பொழிவு-வாகன ஓட்டிகள் அவதி

கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பனிப்பொழிவு: முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்ற வாகன ஓட்டிகள்.

கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவியது.

குறிப்பாக திருமாநிலையூர், செல்லாண்டிபாளையம், திருக்காம்புலியூர், வெங்கமேடு, காந்திகிராமம் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் பனிமூட்டம் காணப்பட்டது.

குறிப்பாக அமராவதி ஆற்றங்கரை ஒட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் அதிகளவு கடும்

பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே மிகுந்த எச்சரிக்கையுடன் மெதுவாகச் சென்றனர்.

திடீரென ஏற்பட்ட கடும் குளிர் காரணமாகப் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து அவதிக்குள்ளான அதே வேளையில், மலைப்பிரதேசங்களான கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய ஊர்களில் நிலவுவது போன்ற குளுமையான சூழல் கரூரிலேயே நிலவியதால் பலர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!