உருக்குலைந்த வெனிசுலாவிற்கு நெய்மர் உதவிக்கரம்!
நிலநடுக்கத்தின் கோரத்தால் உருக்குலைந்து போயுள்ள வெனிசுலா நாட்டிற்கு கால்பந்து வீரர் நெய்மர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவசரகால நிவாரண பணிக்காக அவர் சுமார் 2.4 கோடியை அளித்துள்ளார். சில தினங்கள் முன் வெனிசுலாவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தற்போது வரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 24 நாடுகள் 521 டன் நிவாரண பொருள்களை அனுப்பியுள்ளன.
