Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீலகிரி மாவட்டம் நீர்மின் நிலையம் அருகே காட்டுத்தீ

நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையம் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக மாலை நேரத்தில் வரக்கூடிய பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் வெயிலின் காரணத்தினாலும் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் அனைத்தும் வறட்சி காரணமாக கருகிய நிலையில் உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் நிலவி வரக்கூடிய கடும் வெயில் மற்றும் காற்றின் காரணமாக கூடலூர், மசினகுடி மற்றும் குன்னுர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பரப்பு சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை வறட்சியின் காரணமாக காய்ந்த மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மசினகுடி – சிங்காரா இடையிலான வாகன சவாரிக்கு 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் என முற்றிலுமாக தீ பரவியுள்ளது. தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வளிமண்டல வனப்பகுதியில் விலங்குகளை இடம் விட்டு மாற்றியுள்ளனர்.

error: Content is protected !!