தமிழ்நாட்டின் நிதி தற்சார்பை வலுப்படுத்தவும், மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை உயர்த்தவும் ‘வருவாய் மேம்பாட்டு குழு’ மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் இந்த உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி ஆதாரங்களை பெருக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை ஆராய்ந்து இக்குழு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
