Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் காலமானார்- கண்ணீர் அஞ்சலி

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரலுமான புவன் சந்திர கந்தூரி (91) காலமானார் என்ற செய்தி அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் என்ற உயர் பதவியை வகித்தவர். நாட்டின் பாதுகாப்பிற்காகப் பல ஆண்டுகள் ராணுவத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் அமைச்சரவையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார். இந்தியாவின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமான ‘தங்க நாற்கர சாலைத் திட்டத்தை’ திறம்படச் செயல்படுத்தியதில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. கடந்த 2007ம் ஆண்டு உத்தரகாண்ட்டில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுச் சிறப்பான ஆட்சியைத் தந்தார்.

நேர்மையான அதிகாரி, சிறந்த நிர்வாகி மற்றும் அர்ப்பணிப்புள்ள அரசியல் தலைவர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பி.சி.கந்தூரி அவர்களின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

error: Content is protected !!