Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமயபுரம் கோயிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தை திருக்கோவில்களே ஏற்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, (திருச்சி இணை ஆணையர் மண்டலத்தில்) திருச்சி ,பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 9 ஜோடிகளுக்கு இன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில்

திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள், கோவில் செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

திருமண ஜோடிகளுக்கு மாரியம்மன் திருவுருவப்படம், மஞ்சள், மணமகன், மணமகளுக்கு மெட்டி, பட்டு வேஷ்டி, சட்டை மற்றும் மணவிழா பொருட்கள், அலங்காரப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் சீர்வரிசையாக இரும்பு கட்டில்,மெத்தை, கோரை பாய்,மெத்தை விரிப்பு, தலையணை, மிக்சி, கிரைண்டர் மற்றும் பலகார குடம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன.அதைத் தொடர்ந்து மணமக்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!