தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார்.
குழந்தைகளுக்கு தரமான சீருடை முறையாக வழங்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து சீருடைகளை முறையாக வழங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும்.
