Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்படிருப்பதாக தாஜ்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்குமருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!