Skip to content
Home » வீட்டு உபயோக சமையல் எரிவாயு ரூ.50 உயர்வு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு ரூ.50 உயர்வு

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்ய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 1118.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 1070.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1120.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுபோல மற்ற இடங்களிலும் ஏற்கனவே விற்கப்பட்டு வந்த விலையை விட ரூ.50 இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!