தமிழகம், கேரளம் மாநிலங்களில் இஞ்சியின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்று சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.300-ஐ கடந்துள்ள நிலையில், மொத்த விற்பனை விலை ரூ.280-ஆக உள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் அழுகல் நோய் காரணமாக உற்பத்தி குறைந்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 60 கிலோ இஞ்சி மூட்டை ஒன்று ரூ.8,500 முதல் ரூ.11,000 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டு இதன் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை இருந்தது. முளைகளுடன் கூடிய பச்சை இஞ்சியின் விலை மூட்டை ரூ.5,000 ஆக உள்ளது.
