Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார்(30). இவர்  ஆரணியில், சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்ததால், தனது சொந்த ஊரான சுண்டக்குடிக்கு வந்துள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஆரணிக்கு கடத்திச் சென்று, பேருந்திலேயே தாலி கட்டினார். இதனையடுத்து பலமுறை சிறுமியுடன் உடலுறவு கொண்டிருக்கின்றார்.

இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விக்னேஷ் குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி செல்வம், குற்றவாளி விக்னேஷ் குமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 30,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விக்னேஷ் குமார் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!