திருச்சி, மேலப்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் 28 பேர், கடந்த 10-ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட பின் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாமிதுரை அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், விடுதியை ஒரு வாரம் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
