Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் திருட்டு… பணிப்பெண் தற்கொலை முயற்சி..

ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த மாதம் திருட்டு போன தங்க நகைகள்.  மனைவிக்கு தந்த தங்க பரிசு பொருட்கள் காணாமல் போனதாக மாம்பலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்திருந்தார் ஞானவேல் ராஜா. இப்புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  நகைகளை திருடவில்லை என பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிய போலீசார். இதனைதொடர்ந்து போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இந்தநிலையில் மனஉளைச்சலில் இருந்த பணிப்பெண் லட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!